T20 வடிவத்திற்கு அடிகோலிய  மார்ட்டின் குரோவ் மறைவு

Sunday, March 6th, 2016

கடந்த சில வருடங்களாக அரியவகை இரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவ் (53) காலமானார்.

குரோவ், 77 டெஸ்ட்டுகள் மற்றும் 143 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

1982 இல் அறிமுகமான குரோவ், 1995 இல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

மார்ட்டின் குரோவின் சாதனைகள்

* அதிக டெஸ்ட் சதங்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் – 17

* 1992 உலகக்கோப்பையில், தொடர் நாயகன் (Man of the Series) விருது பெற்றவர்.

* டெஸ்ட் போட்டியில் 299 ஓட்டங்களில் ஆட்டமிழந்த ஒரே வீரர்!

* இவருடைய 299 ஓட்டங்களே நியூசிலாந்து வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச டெஸ்ட் ஓட்டங்களாக இருந்தது. பிறகு 2014 இல், மெக்கல்லம் 302 ஓட்டங்கள் எடுத்து அந்த சாதனையைத் தாண்டினார். இப்போதும் அதிக டெஸ்ட் ஓட்டங்கள் எடுத்த நியூசிலாந்து வீரர்களில் குரோவ், 2 ஆம் இடத்தில் உள்ளார்.

* 1985 ஆம் ஆண்டு விஸ்டன் கிரிக்கெட் வீரராக குரோவ் தெரிவு செய்யப்பட்டார்.

* சுழற்பந்து வீச்சாளரை ஆரம்ப ஓவர்களில் வீசச் செய்வது, பிஞ்ச் ஹிட்டர்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது என இன்றைய கிரிக்கெட் உலகில் நடைமுறையில் இருக்கும் பல விஷயங்களை பல வருடங்களுக்கு முன்பு வெற்றிகரமாகச் செய்து காட்டியவர், குரோவ். 1992 உலகக்கோப்பையில் இதுபோன்ற புதுமையான யோசனைகளால் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார்.

* இன்றைய T20 வடிவத்திற்கு முக்கிய காரணமாக கிரிக்கெட் மேக்ஸ் என்கிற புதுவிதமான கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தினார் குரோவ். நாள் முழுக்க கிரிக்கெட் பார்க்கவேண்டியிருக்கிறது என்கிற புகார்களையடுத்து அவர் 3 மணி நேரம் ஆடக்கூடிய கிரிக்கெட் போட்டியை 1996 இல் அறிமுகப்படுத்தினார். பின்னர், அதுவே T20-யாக இன்று வளர்ந்து நிற்கிறது.

Related posts: