உலகக்கோப்பை போட்டி முடிவுகளை சரியாக கணிக்கம் நாய்!

Friday, June 14th, 2019

உலகக்கோப்பை போட்டியில் ஜெயிக்க போகும் அணி எது என்று நாய் ஒன்று துல்லியமாக கணித்து வருவது ஆச்சரித்தை ஏற்படுத்தியுள்ளது

விளையாட்டை பொருத்தவரை போட்டிக்கு முன்பே எந்த அணி வெற்றிபெறும் என்பதை துறை சார்ந்த வல்லுனர்கள் ஆராய்ந்து கணிப்பார்கள். அதே வேளையில் ஜோசியம், ஆருடம் என்றும் மறுபுறம் விலங்குகளை வைத்து வித்தைகள் காட்டுவதும் உலக அளவில் பிரபலம்.

அந்த வகையில், 2010 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் போது, ஜெர்மனியில் “பால் ஆக்டோபஸ்”, பெரும்பான்மை போட்டிகளின் வெற்றி, தோல்வியை சரியாக கணித்தது.

இதேபோன்று, 2018 உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அக்லீஸ் பூனையும் ஆரூடம் கூறியது. ஆனால், ஆக்டோபஸ் அளவிற்கு வேறு எதுவும் பிரபலமடையவில்லை.

இந்நிலையில், ,இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வெற்றிபெறும் அணி குறித்து, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நாய் ஒன்று துல்லியமாக கணித்து வருகிறது.

சத்தியநாராயணா என்பவர் ஜிம்மி என்ற நாயை வளர்த்து வருகிறார். இது தான் தற்போது கிரிக்கெட் ரசிர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. போட்டிக்கு முன் நேருக்கு நேர் மோதும் இரு அணிகளின் பெயர்களை இரண்டு அட்டைகளில் எழுதி தனித்தனியாக வைக்கப்படும். அதன் மீது, அவித்த முட்டையை இரண்டாக வெட்டி,பாதி பாதி தனித்தனியாக வைக்கப்படும் .

அதில், நாய் எந்த முட்டையை முதலில் சாப்பிடுகிறதோ அந்த அணி தோல்வியுறும் கணிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாக, இதுவரை வங்கதேசம், ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் தோல்வியைத் தழுவும் என 8 போட்டிகளில், முடிவை சரியாக கணித்துள்ளது.

முதல் 2 போட்டிகளில் ஜிம்மி கணித்தது எதேச்சையாக நடந்தது என அதன் உரிமையாளர் மற்றும் குடும்பத்தினர் நம்பியுள்ளனர். ஆனால், அடுத்தடுத்த போட்டிகளில் கணிப்பு துல்லியமானதால் தற்போது ஜிம்மி பிரபலமாகியுள்ளது.

Related posts: