T – 20 தொடர் – பின்ச் உலக சாதனை!

‘ருவென்டி–20’ போட்டியில் 172 ரன் விளாசிய ஆஸ்திரேலியாவின் பின்ச் அதிக ரன் குவித்து உலக சாதனை படைத்தார்.
ஜிம்பாப்வே மண்ணில் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. இதன் 3வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா ஜிம்பாப்வே அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே அணி ‘பவுலிங்’ தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச் ஷார்ட் ஜோடி ‘சூப்பர்’ துவக்கம் தந்தது. நியும்பு ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார் பின்ச். தொடர்ந்து மிரட்டிய இவர் 50வது பந்தில் சதம் விளாசினார். ஷார்ட் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அபாரமாக ரன் குவித்த பின்ச் 172 ரன்களில் (76 பந்து 16 பவுண்டரி 10 சிக்சர்) அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 229 ரன்கள் குவித்தது. ஸ்டாய்னிஸ் (1) அவுட்டாகாமல் இருந்தார். ஜிம்பாப்வே அணி 11 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்த பின்ச் ‘டுவென்டி–20’ அரங்கில் அதிக ரன் குவித்து (172) உலக சாதனை படைத்தார். இதன் மூலம் தனது முந்தைய சாதனையை (156 ரன் எதிர்– இங்கிலாந்து 2013 சவுத்தாம்ப்டன்) முறியடித்தார்.
Related posts:
|
|