தரங்கவின் தலைமைப் பதவி குசல் பெரேராவுக்கு

Thursday, October 19th, 2017

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இறுதி இருபதுக்கு 20 போட்டி லாகூரில் இடம்பெறவுள்ள நிலையில் அதன் தலைமை குசல் பெரேராவுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உபுல் தரங்க பாகிஸ்தான் செல்ல விருப்பம் தெரிவிக்காமையினாலேயே குறித்த தலைமைப் பதவி குசலுக்கும் உப தலைவர் பதவி திசர பெரேராவுக்கும் வழங்கப்பட உள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இருபதுக்கு 20 போட்டியானது ஒக்டோபர் 20ம் திகதி இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசு தீர்மானம்..

எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது முக்கியமானது. புதிய தேர்தல் முறைமையின் கீழ் கிராமங்கள் ரீதியாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

அத்துடன் இலங்கையில் முதன் முறையாக பெண்களின் பிரதிநித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: