ஒருநாள் போட்டிகளில் மாற்றங்கள் -ஐசிசி !

Thursday, June 8th, 2017

ஒருநாள் கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் மூன்று முக்கிய மாற்றங்கள் வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

பந்தின் தன்மைக்கு ஏற்ற துடுப்பை மட்டுமே இனி வீரர்கள் உபயோகப்படுத்த வேண்டும். அதன்படி துடுப்பின் தடிம அளவு 67 மில்லி மீட்டர் இருக்க வேண்டும் எனவும், துடுப்பின் விளிம்பில் 40 மில்லி மீட்டர் வரை இருக்கலாம் எனவும் புதிய வரைவு வகுக்கப்பட்டுள்ளது.

ஒரு தனிப்பட்ட வீரரின் நடவடிக்கையை கண்காணித்து அதில் விதிமுறை மீறல் இருந்தால், அவரை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றும் உரிமை நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது கால்பந்து விளையாட்டில் இருக்கும் ரெட் கார்டு விதிமுறை போன்றதாகும்.

ஓட்டங்கள் எடுக்க முயலும் போது கிரீஸை தொட்டு விட பலசமயம் தாவி விழுவார்கள். தாவும்போது துடுப்பு தரையில் பட்டு மேலௌ நேரும்.துடுப்பு க்ரீஸ் கோட்டுக்கு உள்ளே வந்த நிலையிலும் தரையில் படாமல் இருந்தால் அவர் அவுட் என்றே கருதப்படுவர்.

தற்போது ஐசிசி இதில் செய்துள்ள மாற்றத்தின் படி, பேட்ஸ்மேன் கீரீஸுக்குள் தனது பேட்டை கொண்டு வந்தாலே அது ஓட்டம் எடுத்த கணக்கில் சேரும் என கூறப்பட்டுள்ளது

Related posts: