7 விக்கெட்டில் 356 ஓட்டங்கள்: தாக்குபிடிக்குமா வங்கதேசம்?

Monday, February 13th, 2017
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் கடைசி ஒரு நாள் மீதமுள்ள நிலையில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 356 ஓட்டங்கள் தேவையுள்ளது.

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஐதராபாத்தில் கடந்த 9ம் திகதி தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 687 ஓட்டங்கள் குவித்து டிக்ளர் செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னங்சில் 388 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர், 299 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கி விளையாடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது.

459 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 103 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

மெஹ்முதுல்லா 9 ஓட்டங்களுடனும், சாஹிப் அல் ஹசன் 21 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது நாளை ஒரு நாள் மீதமுள்ள நிலையில் வங்கதேசம் அணி 356 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. வங்கதேச அணியின் கைவசம் 7 விக்கெட்டுகளே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா இந்த தொடரில் தோல்வியை சந்திக்க வாய்ப்பு இல்லை. வங்கதேச இந்த போட்டியில் தோல்வியை தவிர்த்து டிரா செய்ய வேண்டுமென்றால் 90 ஓவர்கள் வரை நிலைத்திருக்க வேண்டும். எனினும், வெற்றி பெறுவது மிகக்கடினம்.

இந்தியாவை விட 356 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 7 விக்கெட்டுக்கள் உள்ளன.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: