இலங்கை கராத்தே சம்மேளன மாவட்ட மட்டப்போட்டியில் 32 தங்கம், 31 வெள்ளி, 26 வெண்கலம் வென்று மாகாதேவா சிறுவர் இல்ல மாணவர்கள் சாதனை!

Wednesday, October 19th, 2016

இலங்கை கராத்தே சம்மேளனத்தின் கிளிநொச்சி மாவட்ட மட்ட கராத்தே போட்டியில் கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்கள் 32தங்கம், 31வெள்ளி, 26வெண்கலம் உட்பட 89 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேற்படி போட்டிகள் கடந்த 7ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்றன. இப்போட்டியில் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தை சேர்ந்த மாணவன் ந.ரவிபவன் கறுத்தப் பட்டிக்கான போட்டியில் 1ஆம் இடத்தினை பெற்று இல்லத்திற்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இப்போட்டியில் வெற்றி பெற்று மாகாணப் போட்டிக்கு தெரிவாகியுள்ள வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் கடந்த 9ஆம் திகதி சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் இல்லத் தலைவர் தி.இராசநாயகம், முகாமைத்துவ பணிப்பாளர் வெ.வேலாயுதம், பிரதம நிறைவேற்று அலுவலர் தே.சுபாகரன், பிரதி பிரதம நிறைவேற்று அலுவலர் செ.கோபிதர்சன், கராத்தே பொறுப்பாசிரியர் ந.ரவிபவன் மற்றும் பிரதம ஆசிரியர் சென்சேய் சி.விஜயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்கள் மாகாண மட்ட தேசியமட்டப் போட்டிகளிலும் இம்முறை பல வெற்றிகளைக் குவிக்கும் சாத்தியம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1-Copy5-620x336 copy

Related posts: