டி 20 தொடரை சமன் செய்தது வங்கதேசம்!

Monday, August 6th, 2018

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி 20 ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது வங்கதேசம். அமெரிக்காவின் புளோரிடா சென்ட்ரல் புரோவார்ட் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள்-வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி 20 கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய வங்கதேசம் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது. (தமிம் இக்பால் 74, ஷகிப் அல் ஹசன் 60). ஆஷிலி, கீமோ பால்- தலா 2 விக்கெட். பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியில் ஆன்ட்ரெ பிளெட்சர் 43, ரோவ்மேன் பவர் 43) முஸ்தபிஸஹர் ரஹ்மான் 3-50, நஸ்முல் இஸ்லாம் 3-28). இறுதியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வென்று தொடரை 1-1 என சமன் செய்தது. இறுதி ஆட்டம் திங்கள்கிழமை நடக்கிறது.

Related posts: