52 ஆண்டுகால இங்கிலாந்தின் கனவு தகர்ந்தது !

Thursday, July 12th, 2018

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை குரோஷியா அணி வீழ்த்தியுள்ளது.

1966-ல் உலக கோப்பை கால்பந்து தொடரில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது இங்கிலாந்து. அதன்பின்னர் இங்கிலாந்து உலகக்கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறவில்லை.

முதல் பாதியில் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்டம் இரண்டாவது பாதியில் குரோஷியாவின் பெரிசிக் 68-வது நிமிடத்தில் அடித்த கோலால் சமநிலை அடைந்தது.

இரண்டாவது பாதியில் இவான் பெரிசிக்கின் உதவியோடு மரியோ மன்ட்ஜூகிக் ஒரு கோல் அடித்தார். அதன் பிறகு குரோஷியா மேலும் கோல் போடும் முனைப்போடு துடிப்பாக ஆடியது. கூடுதல் நேரத்தின் இரண்டாவது பாதி முடிவில் குரோஷியா 2-1 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்தின் 52 ஆண்டுகால கனவு தகர்ந்துள்ளது.

இங்கிலாந்து தோல்வியடைந்தபோதிலும் இங்கிலாந்து ரசிகர்கள் சவுத் கேட்டின் அணிக்கு எழுந்து நின்று மரியாதை செய்தனர். 1996-ல் நடந்த யூரோ கோப்பைக்கு பிறகு இங்கிலாந்தின் சிறந்த செயல்பாடு இதுவே. நான்கு வருடங்களுக்கு முன்பு பிரேசிலில் நடந்த உலககோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறியது

Related posts: