5 ரஷ்ய வீரர்களுக்கு ஒலிம்பிக்கில் பங்குபற்ற தடை!

Wednesday, July 27th, 2016

 

ரியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட ரஷ்யாவின் படகு போட்டி வீரர்கள் 5 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 மற்றும் 2012ம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த ஏராளமான வீரர், வீராங்கனைகள் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை எடுத்துக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் சோச்சியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷ்ய வீரர், வீராங்கனைகள் அந்நாட்டு அரசு ஒத்துழைப்புடன் ஊக்க மருந்தை பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.இதனால் ரியோவில் கலந்து கொள்ள ஒட்டுமொத்த ரஷ்ய அணிக்கும் தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. மேலும், கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் ரஷ்யாவிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ரஷ்யா ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளலாம் என்று கூறியது.அதே சமயம் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் சம்மந்தப்பட்ட விளையாட்டுத்துறை நடவடிக்கை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. அதன்படி ரஷ்யாவைச் சேர்ந்த 5 படகு போட்டி வீரர்களுக்கு உலக கனோய் பெடரேஷன் தடை விதித்துள்ளது.

Related posts: