30 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை வென்றது இலங்கை!

Wednesday, June 22nd, 2022

சுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் நேற்று நடைபெற்ற 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 4 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் சுமார் முப்பது வருடங்களின் பின்பு அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை சொந்த மண்ணில் வென்று இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் கள தடுப்பில் ஈடுபட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஒவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் தனது கன்னி சதத்தை பதிவு செய்த சரித் அசலங்க 110 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 60 ஓட்டங்களையும் பெற்றனர்.

வெற்றி இலக்கான 259 என்ற ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 254 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் டேவிட் வோர்னர் 99 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.பெட் கம்மின்ஸ் 35 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் தனஞ்ச டி சில்வா சாமிக்க கருணாரத்ன மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

5 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: