ஆசியக்கிண்ணம்: முதல் போட்டியில் இந்தியா வெற்றி!

Sunday, November 27th, 2016

மகளிர் ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நேற்று பாங்காக்கில் தொடங்கியுள்ளது. நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 118 ஓட்டங்கள் எடுத்தது.மிதாலி ராஜ் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களும், மந்தனா 41 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதன் பின்னர் துடுப்பெடுத்தாடிய வங்கதேச மகளிர் அணி திணறியது.வீராங்கனைகள் அடுத்தடுத்து ஒன்றை ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 18.2 ஓவரில் 54 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதனால் 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2 புள்ளிகள் பெற்றுள்ளது.இந்திய அணி சார்பில், பூணம் யாதவ் 3 விக்கெட்டும், அஞ்ஜா படேல், கோஸ்வமி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.இதைத் தொடர்ந்து நடந்த 2வது போட்டியில் பாகிஸ்தான் அணி, நேபாள் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: