2020 இந்தியன் ப்றீமியர் லீக் 20 க்கு 20 : 971 வீரர்கள் பதிவு!
Wednesday, December 4th, 2019
2020 இந்தியன் ப்றீமியர் லீக் 20 க்கு 20 கிரிக்கட் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க மொத்தமாக 971 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
கொல்கத்தாவில் எதிர்வரும் 19ஆம் திகதி வீரர்களுக்கான ஏலம் இடம்பெறவுள்ளது. வீரர்களின் அடிப்படை ஏலத்தொகை குறைந்தபட்சம் 10 இலட்சம் இந்திய ரூபாவிலிருந்து, அதிகபட்சமாக 2 கோடி இந்திய ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் 9 ஆம் திகதிக்குள் அனைத்து அணிகளும் வீரர்களின் பட்டியலை இறுதி செய்து ஐ.பி.எல் நிர்வாகத்திடம் கையளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் மொத்தமாக இடம்பெற்று 971 வீரர்களுள், 713 பேர் இந்தியர்கள் என்பதுடன், எஞ்சியுள்ள 258 வீரர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களிலிருந்து 73 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுகிறார்கள்.
ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களில் 215 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடியுள்ளதுடன், 754 பேர் உள்ளூர் போட்டியில் விளையாடியவர்கள்.
வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக அவுஸ்திரேலியாவில் இருந்து 55 பேர் ஏலப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக 54 தென்னாபிரிக்க வீரர்களும், 39 இலங்கை வீரர்களும், 34 மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களும், 24 நியூசிலாந்து வீரர்ளும், 22 இங்கிலாந்து வீரர்களும், 19 ஆப்கானிஸ்தான் வீரர்களும், 6 பங்களாதேஷ் வீரர்களும், ஒரு அமெரிக்க வீரரும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


