2020ம் ஆண்டுக்கான உலகக் கிண்ண 20க்கு20 போட்டித் தொடர்!
Thursday, February 1st, 2018
அவுஸ்திரேலியாவின் எட்டு நகரங்களில் 2020ம் ஆண்டுக்கான உலக கிண்ண 20 க்கு 20 போட்டித் தொடர் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் முதன்முறையாக ஒரே நாட்டில் ஒரே ஆண்டில் ஆடவர் மற்றும் மகளிருக்கான இரண்டு 20 க்கு 20 உலகக் கிண்ணத் தொடர்களும்நடத்தப்படவுள்ளமையும் சிறப்பம்சமாகக் கருதப்படுகின்றது.
2020ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி முதல் நவம்பர் மாதம் 15ம் திகதி வரையில் ஆடவருக்கான 20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரும் மகளிருக்கான தொடர் 2020ல் பெப்ரவரி மாதம் 21ம் திகதி முதல் மார்ச் மாதம் 8ம் திகதி வரையிலும் நடைபெறும்.
இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் அடிலைட், ப்ரிஸ்பேன், கன்பெரா, கீலொங், ஹோபர்ட், மெல்போர்ன், பேர்த் மற்றும் சிட்னி ஆகியநகரங்களில் நடைபெறவுள்ளன.
இரண்டு தொடர்களின் இறுதி போட்டிகளும் மெல்போர்ன் கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் 10 மகளிர் அணிகளும், 16 ஆடவர் அணிகளும் கலந்து கொள்ளவுள்ளன.
Related posts: