1000 ஓட்டங்கள் – 30 விக்கெட்கள் ஒரே ஆண்டில் எடுத்து சாதனை!

Monday, December 26th, 2016

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான மொய்ன் அலி ஒரே ஆண்டில் 1000 ஓட்டங்களையும் 30 விக்கெட்களையும் எடுத்த 3-வது வீரர் என்ற  பெருமையை பெற்றுள்ளார்.

அந்தவகையில் இவர் இந்த ஆண்டில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் 17 போட்டிகளில் விளையாடி 1078 ஓட்டங்களை எடுத்துள்ளார். மேலும் மொத்தமாக 30 விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

மொய்ன்அலி இங்கிலாந்து அணியின் சிறந்த All- Rounder என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் போத்தம் ஒரே ஆண்டில் 13 டெஸ்ட்டில் விளையாடி 1095 ஓட்டங்களும் , 47 விக்கெட்டும் எடுத்தார். 2-வதாக தென்ஆப்பிரிக்க அணி வீரர் காலிஸ் 2001-ம் ஆண்டு 14 டெஸ்ட்டில் 1120 ஓட்டங்களும் , 35 விக்கெட்களும் எடுத்தார்.

தற்போது 3-வது வீர ராக மொய்ன்அலி இந்த மைல்கல்லை எட்டி உள்ளார்.

மேலும் 2016 ம் ஆண்டில் 1000 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட 5-வது வீரர் மொய்ன்அலி என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் ஜோரூட் (1477 ரன்), ஜானி பேர்ஸ் டோவ் (1470), அலக்ஸ்டர் குக் (1270), இந்திய கப்டன் வீராட்கோலி (1215) ஆகியோர் ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளனர்

YUAndpMCbXk_9hvX4xMDoxOjBzMTt2bJ

Related posts: