மீண்டும் களமிறங்குவாரா டி வில்லியர்ஸ்..?
Wednesday, December 18th, 2019
தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஏபிடி வில்லியர்ஸை மீண்டும் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இணைப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க அணியின் தலைவர் டு பிளேஸிஸ் இதனை தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்னர் தென்னாபிரிக்க அணியின் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டி தொடருக்கு முன்னர் ஏபிடி வில்லியர்ஸை மீண்டும் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இணைப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக டு பிளேஸிஸ் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஃபிஃபா முன்னாள் தலைவர் காலமானார்!
ரொனால்டோவை கருவில் இருக்கு போதே கலைக்க நினைத்த தாய்!
மீண்டும் இந்திய அணியில்மொஹமட் ஷமி!
|
|
|


