பயிற்சியாளராக சாதிப்பாரா ஜெயவர்த்தனே?

Tuesday, April 11th, 2017

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஏனைய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச வீரர்கள் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர்.

அவர்கள் இங்கு தங்கள் திறமையை நிரூபித்து அவர்கள் நாட்டின் சர்வதேச அணியில் இடம் பிடிக்கின்றனர். அப்படி ஒரு வரவேற்பு இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு.

இந்த ஐபிஎல் தொடரில் இலங்கை அணியைச் சேர்ந்த சில வீரர்களும் இடம் பிடித்து விளையாடி வருகின்றனர்.

அப்படி ஒரு வீரர் தான் லசித் மலிங்கா. இவர் அண்மையில் காயங்கள் காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாமல் பரிதவித்தார்.

அதன் பின் சமீபத்தில் முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியில் களமிறங்கி, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

இருப்பினும் அவருக்கு இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன் டிராபி தொடரில் இடம் கிடைக்குமா என்பதை தீர்மானிப்பது இந்த ஐபிஎல் தொடர் தான்.

சமீபத்தில் கூட இலங்கை கிரிக்கெட் வாரிய மேலாளர் கூறுகையில், ஐபிஎல்-லில் மலிங்காவின் செயல்பாடுகள் உன்னிப்பாக கவனிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இப்படி கவனிக்கப்பட்டு வரும் மலிங்கா தன்னுடைய பத்தாவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 36 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார்.

இதில் இவரின் பந்து வீச்சின் சராசரி 9 ஆகும். இதில் ஐந்து பந்துகள் மட்டுமே ஓட்டம் கொடுக்காமல் இருந்துள்ளார்.

இப்போட்டியில் மலிங்காவின் பந்து வீச்சு அந்தளவிற்கு அச்சுறுத்தும் அளவில் இல்லை, இன்னும் குறைந்து 10 முதல் 15 போட்டிகள் உள்ளதால், சிறப்பாக செயல்பட்டால் மலிங்கா சாதிப்பது உறுதி.

மலிங்கா இதுவரை 5 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார், அதுமட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்போது புதிய பயிற்சியாளராக உள்ளவர் இலங்கை அணியின் முனனாள் வீரர் ஜெயவர்த்தனே.

இவர் தலைமையிலான மும்பை அணி முதல் போட்டியிலே தோல்வியையும்,இரண்டாவது போட்டியில் வெற்றியையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: