றக்பி வரலாற்றில் முதன் முறையாக இரண்டு போட்டிகள் இரத்து!

Friday, October 11th, 2019


ஹக்பிஸ் சூறாவளி காரணமாக ஜப்பானில் நடைபெறும் உலகக்கிண்ண றக்பி தொடரின் சில போட்டிகளை இரத்து செய்ய உலகக்கிண்ண றக்பி குழு தீர்மானித்துள்ளது.

றக்பி வரலாற்றில் முதன் முறையாக இவ்வாறு பிரபலமான நான்கு நாடுகளின் இரண்டு போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஹக்பிஸ் சூறாவளி எதிர்வரும் சனிக்கிழமை காலை ஜப்பானை மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கும் என அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி சனிக்கிழமை இடமபெறவுள்ள நியூசிலாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கிடையிலான போட்டி பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டிகள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஸ்கொட்லாந்து மற்றும் ஜப்பானுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டவாறு நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த போட்டிகளை இரத்து செய்வது தொடர்பில் தாங்கள் கவலையடைந்துள்ளதாகவும் வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு அவசியம் காரணமாக இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்படவேண்டி உள்ளதாக உலகக்கிண்ண றக்பி குழு தெரிவித்துள்ளது

Related posts: