ஒரே இரவில் புகழடைந்த இளம் இந்திய வீரர்!
Sunday, August 11th, 2019
இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர் சுப்மான் கில்-ஐ சேர்க்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஏ அணி-வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்ற நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்தப் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய வீரர் சுப்மான் கில் 204 ஓட்டங்கள் விளாசி சாதனை படைத்தார். இந்த சதத்தின் மூலம் பலரது கவனத்தை அவர் தன் பக்கம் திருப்பியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சுப்மான் எதிர்பார்த்திருந்தார். ஆனால், அவருக்கு இடம் கிடைக்காததால் வருத்தம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தான் அவர் இரட்டை சதம் விளாசியதைத் தொடர்ந்து, இந்திய அணியில் அவரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக்கும் இதே கோரிக்கையை தற்போது முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘இரட்டை சதம் அடித்ததன் மூலம், ஒரே இரவில் புகழடைந்திருக்கிறார் சுப்மான் கில். இந்திய அணியின் நடுவரிசை துடுப்பாட்ட வீரராக அவரை களமிறக்கலாம். 4வது வரிசைக்கு அவர் பொருத்தமாக இருப்பார். இந்த இளம் வீரரை சேர்த்துக் கொள்ளுங்கள்’ என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


