5 யாழ்.மாவட்ட வீரர்களுடன் 44ஆவது ஆசிய பாடசாலைகள் கால்பந்தாட்டப் போட்டிக்கு தயாரானது இலங்கை!

Sunday, May 22nd, 2016

44ஆவது ஆசிய பாட­சா­லை­க­ளுக்கி டையி­லான (18வயதின் கீழ்) கால்­பந்­தாட்டப் போட்­டியில் பங்­கு­பற்றும் இலங்கை அணியில் யாழ். மாவட்­டத்­திலி­ருந்து 5 வீரர்கள் தெரிவா­கி­யுள்­ளனர். இதில் யாழ். இள­வாலை புனித ஹென்­றி­ய­ரசர் கல்­லூ­ரி­யி­லி­ருந்து ரெசிக்ஸ அம­லதாஸ் மதுஷான், செப­மா­லை­நா­யகம் ஜூட் சுமன், இரா­சையா நேச­ராசா அன்­தினி ரமேஷ் ஆகிய மூவரும், யாழ். மத்­திய கல்­லூ­ரி­யி­லி­ருந்து கோவிந்­த­ராசா ரிது ஷான், ஜெசின் சயந்தன் ஆகிய இருவரு­மாக ஐந்து பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி போட்டி கடந்த வெள்ளிக்­கி­ழமை அன்று தென் கொரி­யாவின் ஜியோங்ஜு விளையாட்­ட­ரங்கில் ஆரம்பமானது. இதில் பங்­கு­பற்றும் 18 வய­துக்­குட்­பட்ட இலங்கை பாட­சாலை அணி­யினர் கடந்த வியாழக்கிழமையன்று தென் கொரியா சென்­ற­டைந்­தனர்

இவ் வருடப் போட்­டி­களில் தமது அணி திற­மையை வெளிப்­ப­டுத்தும் முனைப்­புடன் விளை­யாடும் என அணி பயிற்றுநர் ஏ.கே.எம். அஜ்வத் தெரி­வித்தார்

காலி புனித அலோ­சியஸ் அணி­யி­னதும் கொழும்பு சோண்டர்ஸ் அணி­யி­னதும் கோல்காப்­பா­ள­ரான ரிஷாத் ராஸிக் இவ்­வ­ணியின் தலை­வ­ரா­கவும், உதவி அணித் தலைவ­ராக கொழும்பு றோயல் அணி வீரர் சத்­துர அவிஷ்கவும் நியமிக்­கப்­பட்­டுள்­ளனர்

ரிஷாத் ராசிக், நவீன் ஜூட் (ஜாவா லேன்), மொஹமத் ஷஹீல் (சோண்டர்ஸ்) ஆகிய மூவரும் எவ்.ஏ. கிண்ண கால்பந்தாட்டப் போட்­டி­களில் விளை­யா­டி­வரும் சிறந்த வீரர்களாவர்.

இவர்கள் மூவ­ருடன் யாழ். இள­வாலை புனித ஹென்­றி­ய­ரசர் வீரர் ஆர். ஏ. மதுஷான் கடந்த வருடம் சீனாவில் நடைபெற்ற 43ஆவது ஆசிய பாட­சா­லைகள் கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் பங்­கு­பற்­றிய அனு­ப­வ­சா­லி­யாவார்.

கடந்த வருடப் போட்­டி­களில் இந்­தி­யாவை 4 – 0 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை வெற்றி கொண்­டி­ருந்­தது. சிங்கப்பூர், ஹொங் கொங் ஆகிய நாடு­க­ளு­டனான போட்­டி­களை தலா 2 – 2 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் இலங்கை வெற்றி தோல்­வி­யின்றி முடித்துக்கொண்­டி­ருந்­தது

பலம்­வாய்ந்த சீனா, தாய்­லாந்து ஆகிய நாடு­க­ளுக்கு பலத்த சவா­லாக விளங்­கிய இலங்கை அப் போட்­டி­களில் தலா 0 1 என்ற கோல் அடிப்­ப­டையில் தோல்­வி­ய­டைந்­தது

எனினும் இலங்கை அணி­யினர் மற்­றைய நாடு­களின் பலத்த பாராட்டைப் பெற்­ற­தாக தெரி­விக்­கப்­பட்­டது

இவ் வருடம் பத்து நாடுகள் பங்­கு ­கொள்­வ­துடன் ஒரு குழுவில் சீனா, , தென் கொரியா (இரண்டாம் நிலை அணி), தாய்லாந்து ஆகிய அணி­க­ளுடன் இலங்கை மோதவுள்­ளது

மற்­றைய குழுவில் இந்­தியா, இந்­தோ­னே­ஷியா, மலே­ஷியா, சிங்­கப்பூர், தென் கொரியா (பிர­தான அணி) ஆகி­யன இடம்­பெ­று­கின்­றன

இவ்­வ­ருடம் இலங்­கையின் 18 வய­துக்­குட்­பட்ட குழாமில் யாழ். மாவட்­டத்­தி­லி­ருந்து 5 வீரர்­களும் கொழும்­பி­லி­ருந்து ஒரு வீர­ரு­மாக 6 தமி­ழர்கள் இடம்­பெ­று­கின்­றனர்

சிறு­பான்­மை­யி­னரின் ஆதிக்­கத்தை வெளிப்­ப­டுத்தும் வகையில் 9 முஸ்லிம் வீரர்­களும் குழாமில் இடம்பெறுகின்றனர். 5 வீரர்கள் மாத்­தி­ரமே பெரும்­பான்மை இனத்­த­வர்கள் என்பதும் கவ­னிக்­கத்­தக்­கது

இலங்கை அதன் முத­லா­வது போட்­டியில் மெக்கௌ அணியை நாளை திங்கட்கிழமை எதிர்த்­தாடும். தொடர்ந்து தென் கொரியா (2), தாய்­லாந்து, சீனா ஆகிய நாடுகளை சந்திக்கும்.

18 வய­தின்கீழ் இலங்கை குழாம் விபரம்

ரிஷாத் ராஸிக் (அணித் தலைவர், புனித அலோ­சியஸ்), சத்­துர அவிஷ்க (உதவி அணித் தலைவர்), நிக்லஸ் ஜூட் நவீன் (இரு­வரும் றோயல்), ரெசிக்ஸ அம­லதாஸ் மதுஷான், செப­மா­லை­நா­யகம் ஜூட் சுமன், இரா­சையா நேச­ராசா அன்­தினி ரமேஷ் (மூவரும் இளவாலை புனித ஹென்­றி­ய­ரசர்), கோவிந்­த­ராசா ரிதுஷான், ஜெசின் சயந்தன் (இருவரும் யாழ். மத்­திய கல்­லூரி), எம். கே. இஷான், எம். ஏ. எம். ஷஹீல், எம். ஐ. எம். இஜாஸ், (மூவரும் மரு­தானை ஸாஹிரா), எம். கே. எம். பாஸில் (ஹமீத் அல் ஹுசெய்னி), எவ். ஆர். முஜாஹித் அஹமத் (கட்­டு­கஸ்­தோட்டை புனித அந்­தோ­னியார்), எச். ஏ. ஃபைகர் (புத்­தளம் ஸாஹிரா), எஸ். ஏ. ஆதில் (அலிகார் தேசிய பாட­சாலை)

எம்.ஜே. ரிவ்கான் மொஹமத் (கிண்­ணியா அல் அக்ஸா), எச். எம்.பி.பி. நிஷாந்த (கண்டி கிங்ஸ்வூட்), டி.ரீ. எதி­ரி­வீர (கண்டி திரித்­துவம்), எஸ். டி. சப்­ர­மித்ர இஷான் ஃபைகர் (புத்தளம் ஸாஹிரா), எஸ்.ஏ. ஆதில் (அலிகார் தேசிய பாடசாலை), எம்.ஜே. ரிவ்கான் மொஹமத் (கிண்­ணியா அல் அக்ஸா), எச். எம். பி. பி. நிஷாந்த (கண்டி கிங்ஸ்வூட்), டி. ரீ. எதி­ரி­வீர (கண்டி திரித்­துவம்), எஸ். டி. சப்­ர­மித்ர இஷான் தனுஷ (இரு­வரும் பம்­ப­லப்­பிட்டி புனித பீற்றர்)

Untitled-1 copy

Related posts: