இருபதுக்கு 20 போட்டியில் மீண்டும் சங்கா, டில்சான்!
Thursday, January 19th, 2017
ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள 20க்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடருக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான திலகரட்ன டில்ஷான் மற்றும் குமார சங்ககார ஆகியோர் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளனர்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஹொங்கொங் இல் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடரில் விளையாடுவதற்கு நேற்று ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளனர். இந்தப் போட்டியில் டில்ஷான் கயிடாக் அணிக்காகவும் சங்ககாரா கேலக்ஸி கிளாடியேட்டர் ளாண்டூ அணிக்காகவும் விளையாடவுள்ளார்.
அதேபோல் மார்ச் 8ம் திகதி முதல் 12 திகதி வரை நடைபெறவுள்ள இத் தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சைட் ஹப்ரிடி மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் டெரன் சமி ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Related posts:
ஆட்ட நிர்ணயம்: பாக். வீரர்கள் மூவரிடம் விசாரணை!
சுவிஸில் பனிக்கிரிக்கெட்டில் இலங்கை வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்!
இலங்கை அணி வெற்றி!
|
|
|


