ஆட்ட நிர்ணயம்: பாக். வீரர்கள் மூவரிடம் விசாரணை!

Monday, February 13th, 2017
ஆட்ட நிர்ணய புகார் குறித்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்ஃபான் உள்ளிட்ட 3 வீரர்களிடம் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணை நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சில வீரர்கள் “மேட்ச் ஃபிக்ஸிங்’கில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. அது தொடர்பாக பாகிஸ்தான் சீனியர் அணிக்காக ஆடி வரும் முகமது இர்ஃபான், ஜல்பிகுர் பாபர், ஷாஜைப் அல்ஹசன் ஆகியோரிடம் சனிக்கிழமை விசாரணை நடைபெற்றது.
விசாரணைக்குப் பின்னர் மேற்கண்ட 3 வீரர்களும் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் போட்டியில் தொடர்ந்து விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், “சூதாட்ட தரகர்களை சந்தித்த குற்றச்சாட்டின் கீழ் ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஷர்ஜீல் கான், காலித் லத்தீஃப் ஆகியோருக்கு எதிரான விசாரணை நிறைவடைய இன்னும் 10 முதல் 15 நாள்கள் ஆகும்’ என்றனர்.

PCB-logo

Related posts: