இங்கிலாந்து அணிக்காக விளையாடும் ஜொஃப்ரா ஆர்ச்சர்!

Friday, November 30th, 2018

எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கட் மற்றம் அடுத்த ஆஸஸ் கிரிக்கட் தொடர்களில் இங்கிலாந்து அணிக்காக ஜொஃப்ரா ஆர்ச்சர் விளையாட முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்து கிரிக்கட் அணியில் இணைவதற்கு, குறைந்த பட்சம் 7 வருடங்கள் பிரித்தானிய வதிவிட உரிமையை கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. எனினும் இது நேற்று தளர்த்தப்பட்டு 3 வருடங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

பார்படோசை சேர்ந்த ஆர்ச்சர் 2015ம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வசித்து வருகின்ற நிலையில், அவரால் இங்கிலாந்து அணியில் தற்போது இணைந்துக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன்செக்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஆர்ச்சர், தற்போது மிகச்சிறந்த சகலதுறை விளையாட்டாளராக வளர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக அவர் 8 லட்சம் பவுண்களுக்கு ஏலத்தில் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: