அனைத்துவகை கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரி வைத்திருக்கும் விராட் கோலி!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 வது டி20 கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்றது.
இதில் இந்திய அணி தலைவர் விராட் கோலி 72 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தது.
72 ஓட்டங்கள் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் (22), அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2 வது இடத்தில் ரோகித் சர்மா உள்ளார்.
அதுமட்டுமல்ல 3 வகை கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரி வைத்துள்ள ஒரே துடுப்பாட்ட என்ற பெருமையை பெற்றுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் 71 போட்டிகளில் 66 இல் துடுப்பெடுத்தாடிய 2441 ஓட்டங்கள் அடித்துள்ளார். சராசரி 50.85 ஆகும். ஒருநாள் போட்டியில் 60.31 சராசரியும், டெஸ்ட் போட்டியில் 53.14 சராசரியும் வைத்துள்ளார்.
Related posts:
கொக்குவில் இந்துவை வென்றது யாழ். மத்தி!
இங்கிலாந்து அணியை வழிநடத்திச் செல்லும் ஹாரி கேன்!
T-20 தொடர்: தரப்படுத்தலில் முன்னேறிய பூனம் யாதவ் !
|
|