T-20  தொடர்:  தரப்படுத்தலில் முன்னேறிய பூனம் யாதவ் !

Wednesday, June 13th, 2018

ஆசிய கிண்ண மகளிர் 20க்கு20 கிரிக்கட் தொடரில் சிறப்பாக செயற்பட்டிருந்த இந்திய அணியின் பந்துவீச்சாளர் பூனம் யாதவ், சர்வதேச கிரிக்கட் பேரவையின் 20க்கு20 தரப்படுத்தலில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

இந்த தொடரில் அவர் 9.14 என்ற சராசரியின் அடிப்படையில் 7 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்தநிலையில் அவர் தற்போது தரப்படுத்தல் பட்டியலில் 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் மற்றும் நியுசிலாந்தின் லே கெஸ்பெரக் ஆகியோர் முறையே முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ளனர்.

மேற்கிந்திய தீவுகளின் ஹெய்லே மெத்தீவ்ஸ் நான்காம் இடத்திலும், பாகிஸ்தானின் அனாம் அமீன் 5 ஆம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts: