ஹொட்டல் அறையில் இளம்பெண்: சிக்னார் பாகிஸ்தான் வீரர்!

வங்கதேச பிரிமியர் லீக் டி20 தொடரில் விளையாடிய பாகிஸ்தான் வீரர் ஒருவர் தனது ஹொட்டல் அறையில் இளம்பெண் ஒருவரை தங்க வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில் வங்கதேச வீரர்களான சபீர் ரஹ்மான் மற்றும் அல் அமின் ஹொசன் இருவரும் தங்கள் அறையில் பெண்களை தங்க வைத்ததாக சிக்கலில் சிக்கினர்.இதனால் அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த வங்கதேச கிரிக்கெட் வாரியம், அபராதமும் விதித்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் வீரர் ஒருவரும் தனது அறையில் இளம்பெண் ஒருவரை தங்க வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அந்த பெண் மீது ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த பாகிஸ்தான் வீரர் யார் என்பது தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை.
இந்நிலையில் அந்த பாகிஸ்தான் வீரருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவருக்கு அபராதம் போன்ற ஏதுவும் விதிக்கப்படவில்லை.
Related posts:
|
|