ஹைதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா!

Monday, May 23rd, 2016

கொல்கத்தா அணிக்கெதிரான ஐ.பி.எல். போட்டியில் ஹைதராபாத் அணி 22 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.

இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய கொல்­கத்தா அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்­களில் 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 171 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.

கொல்­கத்தா அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக உதப்பா மற்றும் கம்பீர் ஆகியோர் களமிறங்­கினர். இதில் உதப்பா அதி­ர­டி­யாக ஆடி 25 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழக்க, மறுமுனையில் நின்ற கம்பீர் 16 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார்.

அதன்­பி­றகு ஜோடி சேர்ந்த யூசுப் பதான் மற்றும் பாண்டே ஆகியோர் அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதி­ர­டி­யாக உயர்த்­தினர். இதில் பாண்டே 48 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க, பத்தான் 52 ஓட்டங்­களைப் பெற்று இறு­தி­வரை களத்தில் நின்றார்.

பின்னர் 172 ஓட்­டங்­கள்­பெற்றால் வெற்றி என்ற நிலையில் கள­மி­றங்­கிய ஹைத­ராபாத் 8 விக்கெட்டுக்­களை இழ­ந்து 149 ஓட்­டங்­களைப் பெற்று தோல்­வி­ய­டைந்­தது.

ஹைத­ராபாத் அணியின் ஆரம் பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக தவான் மற்றும் அணித் தலைவர் வோர்னர் ஆகியோர் கள­மி­றங்­கினர். வோர்னர் இந்தப் போட்­டியில் 18 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்து ஏமாற்­றினார்.

இவரின் விக்கெட் விழ அடுத்­த­டுத்து வந்­த­வர்­களும் சொற்ப ஓட்­டங்­க­ளுக்கு விக்­கெட்­டுக்­களை பறிகொ­டுத்­தனர். ஓஜா(15), யுவராஜ் சிங்க (19), வில்­லி­யம்சன் (7), ஹூடா (2), ஹென்­றி­கியூஸ் (11) என ஆட்­ட­மி­ழக்க தவான் மட்டும் இறு­தி­வரை போராடி 51 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழந்தார்.

இறு­தியில் ஹைத­ராபாத் அணி 20 ஓவர்­களில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 149 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவிக்கொண்டது. கொல்கத்தா அணி சார்பாக சுனில் நரேன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Related posts: