ஹலெப், வொஸ்னியாகி 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

கத்தார் பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு சிமோனா ஹலெப், கரோலின் வொஸ்னியாகி ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
கத்தார் பகிரங்க டென்னிஸ் தொடர் போட்டிகள் அந்நாட்டின் டோகா நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி ஜெர்மனியின் கரினா வித்தெரோப்டை எதிர்கொண்டார்.
இப்போட்டியில், அதிரடியாக விளையாடிய வோஸ்னியாகி முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் இரண்டாவது செட்டையும் 6-0 என கைப்பற்றினார்.
இதன்மூலம் 6-−2, 6-−0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற வொஸ்னியாகி வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், சிமோனா ஹலெப்பும், ரஷியாவின் மகரோவாவும் மோதினர். இதில் அதிரடியாக விளையாடிய ஹலெப் முதல் இரண்டு செட்டையும் 6-−3, 6-−0 என்ற நேர் செட்களில் கைப்பற்றி வெற்றி பெற்றார். இதுதவிர ஜோனா கோண்டா, பிளிஸ்கோவா, அஞ்சலிக் கெர்பர் ஆகியோரும் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
Related posts:
|
|