ஹபீஸ் மீதான பந்துவீச்சுத் தடை நீக்கம்!

Friday, December 2nd, 2016

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் முகமது ஹபீஷ், சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் பந்துவீச அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கட் சபையின் விதிமுறைகளுக்கு முரணாக முகமது ஹபீஸ் பந்து வீசுவதாக இருமுறை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஒரு வருடத்திற்கு போட்டித் தடை விதிக்கப்பட்டது.

இவருடைய பந்து வீச்சு தடைக்காலம் எதிர்வரும் ஜூலை மாதமே நிறைவடையும் எனினும் பிறிஸ்பேன் தேசிய கிரிக்கெட் மையத்தில் அண்மையில் அவருடைய பந்து வீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் ஹபீஸின் முழங்கை அனுமதிக்கப்பட்ட 15 டிகிரிக்கு உட்பட்டு இருப்பதாக அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

இதனையடுத்து ஹபீஸ் மீதான பந்துவீச்சுத் தடையை நீக்கி சர்வதேச கிரிக்கட் சபை உத்தரவிட்டுள்ளது. எனினும் அவரது பந்து வீச்சை நடுவர்கள் தொடர்ந்து கண்காணிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் மீண்டும் பந்துவீச அழைக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் அவுஸ்திரேலியாவுக்கு  எதிரான டெஸ்ட் தொடரில் உள்ளடக்கப்படவில்லை. எனவே அவர் அடுத்த மாதம் முதல் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் இணைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹபீஸ் முன்வெட்டு சுழற்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

mohammad-hafeez-action

Related posts: