ஹதுருசிங்கவின் பயிற்சியாளர் பதவி குறித்து திமுத் கருத்து!
Friday, November 17th, 2017
பங்களாதேஷ் அணியின் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்து இராஜினாமா செய்யவுள்ள சந்திக ஹத்துருசிங்கவை இலங்கை அணியின் பிரதான கிரிக்கெட் பயிற்சியாளராக நியமித்தால் எதிர்கால சவால்களுக்கு சிறந்த வாய்பாக இருக்கும் என இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்த தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டி சுற்றுக்காக இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு ஊடகங்களின் மத்தியில் அவர் தனது அங்கலாய்ப்பை வௌிப்படுத்தியுள்ளார்.
தாம் மாகாண போட்டிகளின் போது ஹத்துருசிங்கவிடம் பயற்சி பெற்றுள்ளதாகவும் தற்போதுள்ள வீரர்கள் தொடர்பாக அவர் மிகவும் புரிந்துணர்வுடன் இருப்பதாகவும் திமுத் தெரிவித்துள்ளார்.
Related posts:
மீண்டும் இலங்கை அணி தோல்வி!
தோல்விக்கு யார் காரணம்: விளக்கம் சொல்லும் கோஹ்லி!
இன்று இலங்கை இந்திய அணிகள் மோதும் 20 ஓவர் போட்டி!
|
|
|


