டோனி – கோஹ்லி  இணைந்து பணியாற்றுவது சிறப்பானது – ரஹானே

Tuesday, July 18th, 2017

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியுடன் விராட் கோஹ்லி இணைந்து பணியாற்றுவதை பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளதென இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான அஜின்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றித் தலைவன் என போற்றப்படும் டோனியிடம் போட்டியின் போது களத்தடுப்பு மற்றும் முக்கிய தருணங்களில் கோஹ்லி டோனியிடம் ஆலோசனைக் கேட்பது வழக்கம். இந்த பின்னணியிலேயே ரஹானே இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் “இந்திய அணியுடன் டோனி உள்ளமை மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் எங்களுடன் இருப்பது அதிஷ்டம். விராட் கோஹ்லியுடன் டோனி இருப்பதுஇ விராட் கோஹ்லிக்கு மிகவும் எளிதாக உள்ளது.

விராட் கோஹ்லி டோனியிடம் சென்று ஆலோசனைக் கேட்கிறார். டோனியும் சிறந்த ஆலோசனைகள் வழங்கியுள்ளார். இருவரும் இணைந்து பணியாற்றுவதை பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது” என கூறினார்.

Related posts: