வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் வரவேண்டாம் -சோயிப் அக்தர் சொல்கிறார்!

Thursday, October 27th, 2016

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள போலீஸ் அகாடமியில் தற்கொலை படை தீவிர வாதிகள் சமீபத்தில் அதிரடி தாக்குதல் நடத் தினார்கள். இதில் 62 போலீசார் மற்றும் 2 இராணுவ வீரர்கள் பலியா னார்கள். 170 பேர் காயம் அடைந்தன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வெளிநாட்டு அணிகளுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும்   முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார் அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

பாகிஸ்தானில் பாது காப்பு நிலை கவலை அளிக்கிறது. வெளிநாட்டு அணிகளுக்கு தற்போது பாது காப்பு இல்லை. இயல்பு நிலை முற்றிலும் திரும்பும் வரை வெளிநாட்டு அணிகளை பாகிஸ்தானுக்கு  அழைக்க வேண்டாம். பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால் அதற்கு சில காலம் ஆகலாம். இவ்வாறு அவர் கூறி னார்.

2009-ம் ஆண்டு லாகூரில்  இலங்கை அணி சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதன் பிறகு அந்நாட்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வில்லை. முன்னணி நாடுகள் பாகிஸ்தான் சென்று விளை யாட மறுத்து வருகின்றன. ஆப்கானிஸ்தான், கென்யா, ஜிம்பாபவே போன்ற சிறிய அணிகள் மட்டுமே பாகிஸ்தான் சென்று விளையாடியுள்ளன.

northern provincil councial 66547 copy

Related posts: