வீதி சரியில்லை: பரிசாக பெற்ற காரை திருப்பியளிக்கும் ஒலிம்பிக் மங்கை!

Thursday, October 13th, 2016

அகர்தாலாவில் பி.எம்.டபிள்யூ. சர்வீஸ் செண்டர் கிடையாது. அதை ஓட்டக்கூடிய ஓட்டுநரும் கிடைக்கவில்லை. ஊரின் சாலைகளில் இந்த சொகுசு காரை ஓட்டுவது எளிதாக இல்லை  எனவெ பரிசாக கிடைத்த சொகுசு காரை திருப்ப ஒப்படைக்க ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தீபா கர்மாகர் முடிவு செய்துள்ளார்.

ஒலிம்பிக்கில் கலக்கிய சிந்து, சாக்ஷி, தீபா கர்மாகர், சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளிப்பதாக ஐதராபாத் மாவட்ட பாட்மிண்டன் சங்கத் தலைவர் சாமுண்டேஷ்வரநாத் அறிவித்தார்.

ரியோ ஒலிம்பிக்கிற்கான இந்திய அணியின் நல்லெண்ணத் தூதர் சச்சின், நால்வருக்கும் கார்களை பரிசாக வழங்கினார்.இந்நிலைியில் தீபா கர்மாகரின் தந்தை கூறியதாவது, நாங்கள் காரைத் திருப்பித் தரவில்லை. அதற்குப் பதிலாக வேறு காரை வாங்க முடிவு செய்துள்ளோம். அகர்தாலாவில் பிஎம்டபிள்யூ சர்வீஸ் செண்டர் கிடையாது.

அதை ஓட்டக்கூடிய ஓட்டுநரும் கிடைக்கவில்லை. மேலும் எங்கள் ஊரின் சாலைகளில் இந்தச் சொகுசு காரை ஓட்டுவது எளிதாக இல்லை என கூறியுள்ளார்.

Sachin

Related posts: