விலை போகாத ஸ்மித்தின் சுயசரிதை!

பந்தை சேதப்படுத்தியதால் ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்ட கப்டன் ஸ்ரீவ் ஸ்மித்தின் சுயசரிதை விலை குறைத்தும் விற்பனையாகவில்லை.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கப்டன் என கூறப்பட்ட ஸ்ரீவ் ஸ்மித் (28 வயது) ஜ.சி.சி தர வரிசை டெஸ்ட் போட்டிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இவர் எழுதிய சுயசரிதை புத்தகமான தி ஜேர்னி ஸ்ரீவ் ஸ்மித் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனால் சில வாரங்களுக்கு முன் தென் ஆபிரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஸ்ரீவ் ஸ்மித், வார்னர், பான் கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியது உறுதியானது. இதையடுத்து ஓராண்டுக்கு ஸ்மித்துக்கு தடை விதிக்கப்பட்டது.
அவரது இந்த செயலை அந்நாட்டு மக்கள் அவமானமாக கருதுகின்றனர். பிரிஸ்பேனில் உள்ள மிகப்பெரிய புத்தகக் கடையில் அவரது சுயசரிதைப் புத்தகம் ட்ரு கிரைம் (உண்மைக் குற்றம்) என்ற பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி எங்கும் விற்பனையாகாததால் 24 டொலராக இருந்த புத்தகத்தின் விலையை இரண்டு டொலராக குறைத்துள்ளனர்.
அதற்குப் பின்பும் சரியாக விற்பனையாகவில்லை. இந்தியா உட்பட கிரிக்கெட் விளையாட்டும் நாடுகளிலும் இந்த புத்தகம் எதிர்பார்த்த அளவு விற்பனையில்லை என்று கூறப்படுகிறது.
Related posts:
|
|