விம்பிள்டன் தொடர்: முருகுஸா தோல்வி!

Friday, July 1st, 2016

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் ரெனிஸ் போட்டி லண்டன் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதில் முன்னணி வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முருகுஸா அதிர்ச்சியளிக்கும் வகையில் தோல்வி கண்டு வெளியேறியுள்ளார். இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் முருகுஸாவும், ஸ்லோவாக்கியாவை சேர்ந்த ஜானா செபலோவா-ம் 2 வது சுற்றில் மோதினர். இப்போட்டியின் ஆரம்ப முதலே செபலொவா ஆதிக்கம் செலுத்தி வந்தார்.

இப்போட்டியில் முருகுஸா 3-6,2-6, என்ற நேர் செட் கணக்கில் செபலொவிடம் எளிதாக வீழ்ந்தார். மேலும் இப்போட்டி 58 நிமிடங்களில் முடிவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டி விரைவில் முடிவதற்கு முருகுஸா செய்த அதிக பிழைகளே காரணம் என்று கூறப்படுகிறது. உலக தரவரிசையில் 2 ம் நிலையில் இருக்கும் முருகுஸா, 124 ம் நிலையில் உள்ள ஸ்பெயினின் செபலோவாவிடம் வீழ்ந்ததன் மூலம் 2 வது சுற்றுடன் வெளியேறினார்.

சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் ரெனிஸ் போட்டியில் முருகுஸா சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், கடந்த 18 ஆண்டுகளில் நடை பெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மகுடம் வென்ற முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். 2015 ம் ஆண்டு நடை பெற்ற விம்பிள்டன் ரெனிஸ் போட்டியில் முருகுஸா இறுதி போட்டி வரை சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செபலோவா கூறுகையில், இன்று நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை, நான் இன்று சிறப்பாகவே விளையாடினேன், அதனால் வெற்றி பெறமுடிந்தது.

இந்த வெற்றிக்கு தகுதியானவள் என்றும், கடந்த ஆண்டு முன்னணி வீராங்கனையான சிமோனா ஹாலப்பை(ரோமானியா) வீழ்த்தினேன் என்றும் நினைவுபடுத்தினார். இது என் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள் என்றும் கூறினார்.மகளிருக்கான மற்றொரு ஆட்டத்தில் ரூமேனியாவின் சிமோன ஹாலெப் 6-1,6-1,என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி வீராங்கனையான பிரான் செஸ்கா சிவோனை வெற்றி கண்டு 3 வது சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னாள் சாம்பியன் அமெரிக்கவின் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், லிசிக்கி ,2வது சுற்றில் வெற்றி பெற்று 3 வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

Related posts: