விம்பிள்டன் இறுதிப் போட்டி – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்!
Monday, July 15th, 2019
விம்பிள்டன் இறுதிப் போட்டியில் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
விம்பிள்டன் டென்னிஸ் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜோகோவிச் – பெடரர் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டை ஜோகோவிச் 7(7)-6(5) எனக் கைப்பற்றினார். 2-வது செட்டை பெடரர் 6-1 என எளிதில் கைப்பற்றினார்.
3-வது செட்டை ஜோகோவிச் 7(7)-6(4) எனக் கைப்பற்றினார். 4-வது செட்டை 6-4 என ரோஜர் பெடரர் கைப்பற்றினார். இதனால் நான்கு செட்களில் இருவரும் தலா இரண்டில் வெற்றி பெற்றதால் 2-2 என சமநிலைப் பெற்றனர்.
போட்டியில் இறுதியில் ஜோகோவிச் 7-6, 6-1, 7-6, 4-6, 13-12 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
Related posts:
203 ஓட்டங்களுக்குள் சுருண்டது அவுஸ்திரேலியா!
உணவு இடைவேளைக்கு முன்னர் சதமடித்து டேவிட் வார்னர் சாதனை!
இயான் மோர்கன் விளக்கம்!
|
|
|


