இயான் மோர்கன் விளக்கம்!

Saturday, May 27th, 2017

தென்னாபிரிக்க அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியின் இடைநடுவே வெளியேறிய இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ், காயமடைந்துள்ளதாக வெளியான செய்திக்கு அணியின் தலைவர் இயான் மோர்கன் விளக்கமளித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை  நடைபெற்ற இப்போட்டியின் போது, ஸ்டோக்ஸ் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய பின்னர், பிசியோதெரபியிடம் ஆலோசித்த பின்னர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

20வது ஓவரை வீசிய பின்னர் வெளியேறிய அவர், 26வது ஓவரின்போதுதான் களம் இறங்கினார். ஆனாலும் அவர் பந்து வீசவில்லை. இதனால் பென் ஸ்டோக்ஸிற்கு காயம் ஏற்பட்டிருக்குமோ? என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள மோர்கன், ”பென் ஸ்டோக்ஸ் மீண்டும் மைதானத்திற்கு திரும்பும்போது, பந்து வீச அனுமதி அளிக்கப்பட்டது. அவர் பந்து வீசினால் எந்தவித பாதிப்பும் இருக்கும் என்று என்று நான் எண்ணவில்லை. அவருக்கு முழங்காலில் வீக்கம் இல்லை.

காயத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் காயத்தின் அறிகுறி இருக்கிறதா? என்பது குறித்து மதிப்பீடு செய்ய முடியும். காயம் ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து தெரிவதற்காக அவர் வெளியேறியது சரியான முடிவு” என கூறினார்.

Related posts: