பங்களாதேஷ் கிரிக்கெட் சபை எடுத்த முடிவு!

Monday, February 6th, 2017

 

வங்கதேச அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என்று வங்கதேச அணியின் தலைமை தேர்வாளர் தெரிவித்துள்ளார்.

வங்கதேச அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கு பின்னர் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

வங்கதேச அணியில் தற்போது எதிரணியினரை அச்சுறுத்தும் வேகப்பந்து விச்சாளராக முஸ்தபிசுர் ரஹ்மான் உருவெடுத்துள்ளார். இவரது பந்து வீச்சை உலகின் முன்னனி கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து வருகின்றனர். இதனால் இவர் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் காலடி வைத்தார். அதைத் தொடர்ந்து பல தொடர்களில் பங்கேற்ற அவர் காயம் காரணமாக அண்மையில் டெஸ்ட் தொடரில் பங்கேற்காமல் இருந்தார்

இந்நிலையில் தற்போது அவர் காயங்களில் இருந்து குணமடைந்து வருவதாகவும், கண்டிப்பாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்குவார் என்று வங்கதேச அணியின் தலைமை தேர்வாளர் தெரிவித்துள்ளார். இதைப் பார்க்கும் போது வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் இந்திய அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி என்பதால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையே முக்கியத்துவம் கொடுத்துள்ளது போல் தெரிகிறது.

images-1

Related posts: