வலைப்பந்தாட்டத்தில் சுண்டுக்குளி மகுடம் சூடியது
Tuesday, March 20th, 2018
யாழ்ப்பாணம் கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத்தில் 16 வயதுப் பெண்கள் பிரிவில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணி சம்பியனானது.
கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இறுதியாட்டத்தில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணி 21:5 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்று கிண்ணம் வென்றது. மூன்றாமிடத்தை இடைக்காடு மகாவித்தியாலய அணி பெற்றது.
Related posts:
ஆஸி அணியின் முன்னாள் வீரர் காலமானார்!
பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் எதிரொலி : ஐ.சி.சி அதிரடித் திட்டம்!
மகிழ்ச்சியாகவே விடைபெறுகின்றேன் - கூறுகிறார் அஜந்த மெண்டிஸ்!
|
|
|


