மகிழ்ச்சியாகவே விடைபெறுகின்றேன் – கூறுகிறார் அஜந்த மெண்டிஸ்!

Tuesday, September 3rd, 2019


எதிர்காலத்தில் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக செயற்பட தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“எந்தவொரு விரக்தியும் ஏமாற்றமும் இல்லை. மகிழ்ச்சியாகவே விடைபெறுகின்றேன். உடல் உபாதை காரணமாகவே இவ்வளவு நாட்கள் என்னால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. பயிற்சியாளராவதற்கான அனைத்து தகுதிகளையும் நான் கொண்டுள்ளேன்.” என்றும் அஜந்த மெண்டிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

19 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள மென்டிஸ் 70 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டுள்ளதோடு 87 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றி 152 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும், 39 சர்வதேச டி20 போட்டிகளில் பங்குபற்றி 66 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: