வருகிறது புதிய கிரிக்கட் போட்டி !

Sunday, December 3rd, 2017

ஐக்கிய அரபு இராட்சியத்தில் ரி10 எனப்படும் 10 ஓவர் லீக் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தொடர் போட்டிகள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் போட்டியில் ‘மாரதா அரேபியன்ஸ்’ என்ற பெயரிலான அணியும் கலந்து கொள்ளவுள்ளது.இந்த அணி முன்னாள் இந்திய கிரிக்கட்ட துடுப்பாட்டக்காரரான சேவாக் தலைமை தாங்கவுள்ளார்.

இந்த அணியின் அறிமுக விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய சேவாக் சர்வதேச கிரிக்கட் பேரவை, கிரிக்கட் போட்டிகள் ஒலிம்பிக் தொடரில் இடம்பெற விரும்பினால், ரி10 ஓவர் போட்டிகள் உகந்ததாக இருக்கும் என தெரிவித்தார்.

கால்பந்தாட்டம் போன்று ரி10 போட்டிகள் 90 நிமிடத்தில் நிறைவடைந்து விடும் என குறிப்பிட்ட அவர், இதன் மூலம் மேலும் பல அணிகள் பங்கு கொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: