ரோஹித் இரட்டைச்சதம்: இடிந்து போனது திசாரவின் கனவு!

Thursday, December 14th, 2017

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற நிலையில் முன்னிலை வகித்தது.
இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று முடிவிற்கு வந்துள்ளது. இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி தலைவர் திசாரா பெரேரா முதலில் பந்துவீச முடிவெடுத்தார்.
ஆரம்ப ஆட்டக்காரர்களாக அணித்தலைவர் ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இருவரும் சத இணைப்பாட்டத்தை நல்கியதனூடாக அணிக்கு வலுவான ஆர்மபம் கிடைத்தது. அரைசதம் கடந்த தவான் 68 ரன்களில் சசித் பதிரானா பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யர் , ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்து இலங்கைப்பந்து வீச்சாளர்களை திணறடித்தார்கள். ரோஹித் சர்மா தனது 3 வது இரட்டை சதத்தை பெற்றார்.115 பந்துகளில் சதமடித்த ரோஹித், அடுத்த 100 ஓட்டங்களை வெறுமனே 36 பந்துகளில் கடந்தார்.இறுதியில் இந்திய அணி 4 விக்கெட்களை மட்டும் இழந்து 392 ஓட்டங்களைக் குவித்தது.13 பவுண்டரிகள், 12 சிக்ஸர்கள் ரோஹித் சர்மாவின் துடுப்பு மூலம் பெறப்பட்டன.மொத்தமாக 153 பந்துகளில் ஆட்டம் இழக்காது 208 ஓட்டங்களை குவித்தமை சிறப்பம்சமாகும்.இறுதி 10 ஓவர்களில் மட்டும்147 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன, ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 208 ஓட்டங்களையும், தவான் 68. ஐய்யர் 88, டோனி 7, பாண்டையா 8 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்கள். இலங்கை அணிசார்பில் திசார பெரேரா 3 விக்கெட்களையும், பதிரன 1 விக்கெட்டையும். கைப்பற்றினார்கள். 50 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 4 விக்கட்டுக்களை மட்டுமே இழந்து 392 ஓட்டங்களைப்பெற்றது.
இமாலய வெற்றி இலக்கான 393 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான இணைப்பாட்டத்தை வெளிக்காட்ட தவறினர். தரங்க 7 ஓட்டங்களுடனும், குணாதிலக 16, திரிமன்னே 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர், பின்னர் இணைந்த டிக்வெல்ல மத்தியூஸ் ஜோடி அதிரடியாக துடுப்பாடினாலும், டிக்வெல்ல 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விக்கட்கள் பறிபோனதால் இளநகை அணியால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை, தனிமனிதனாக மத்தியூஸ் இறுதிவரை போராடி 111 ஓட்டங்களை ஆட்டமிளக்காது பெற்றுக்கொடுத்தார். மத்தியூஸ் தனது 2 சதங்களையும் இந்தியாவுக்கெதிராக இந்தியமண்ணிலேயே பெற்றுக்கொண்டார், இரண்டிலும் இலங்கை தோல்வியை தழுவியுள்ளது.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் சகால் 3 விக்கட்டுக்கலையும், பும்ரா 2 விக்கட்டுக்களையும், புவனேஸ்வர், பாண்டையா, அறிமுக வீரரான வாசிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றினர். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக மூன்றாவது இரட்டைச்சதம் கடந்த அணித்தலைவர் ரோஹித் சர்மா தெரிவானார். இரு அணிகளுக்குமிடையிலான தீர்க்கமான மூன்றாவது ஒருநாள் போட்டி வருகின்ற 17ம் பகல் இரவு போட்டியாக விசாகப்பட்டினத்தில் இடம்பெறவுள்ளது. 1-1 என்ற நிலையில் தொடர் சமனிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Related posts: