ஆப்கானிஸ்தான் அணிக்கு கிடைத்த பயிற்சியாளர். !

Saturday, September 28th, 2019

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் வீரர் லான்ஸ் குளூஸ்னர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியில் 90களில் சிறந்த ஆல்-ரவுண்டர் வீரராக விளங்கியவர் லான்ஸ் குளூஸ்னர். 2004ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர், 2010ஆம் ஆண்டு வரை உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார்.

இந்நிலையில், வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக லன்ஸ் குளூஸ்னர் நியமிக்கப்பட்டுள்ளார். 50 பேர் இந்த பதவிக்கு விண்ணப்பித்த நிலையில், குளூஸ்னரை ஆப்கானிஸ்தான் அணி நிர்வாகம் தெரிவு செய்துள்ளது.

உலகக் கிண்ணத் தொடருக்கு பின்னர் இளம் வீரர் ரஷீத் கான், ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது குளூஸ்னர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 2020ஆம் ஆண்டு வரை பயிற்சியாளராக செயல்படுவார் என்றும், அதன் பின்னர் அணியின் செயல்பாட்டின் அடிப்படையில் அவரது ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 48 வயதாகும் குளூஸ்னர் இதுகுறித்து கூறுகையில், ‘சர்வதேச கிரிக்கெட்டில் திறமையான வீரர்களை கொண்ட அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிப்பதை பெருமையாகக் கருதுகிறேன்.

கடுமையான பயிற்சி மூலம் உலகின் சிறந்த அணியாக ஆப்கான் அணியை மாற்ற முடியும் என்று நம்புகிறேன். அவர்களின் கிரிக்கெட்டை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு உதவியாக இருப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

Related posts: