கோஹ்லி இருக்கையில் எதற்கு இந்திய அணிக்கு பயிற்சியாளர்?

Monday, June 26th, 2017

விராட் கோஹ்லி தன்னையே BOSS என நினைத்து கொண்டால் இந்திய அணி பயிற்சியாளர் இல்லாமலே விளையாடலாமே என முன்னாள் கிரிக்கெட் வீரர் எரப்பள்ளி பிரசன்னா சாடியுள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே சமீபத்தில் தனது பதவியை  இராஜினாமா செய்தார்.இதற்கு காரணம் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி அவர் மீது கோபத்தில் இருந்தது தான் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் எரப்பள்ளி பிரசன்னா கூறுகையில், அணி தலைவர் தான் BOSS என்றால் அவர்களுக்கு பயிற்சியாளரே தேவையில்லை என நினைப்பதாக கூறியுள்ளார்.மேலும், கோஹ்லி சிறந்த வீரர் என்பதில் மாற்று கருத்தே கிடையாது. ஆனால் அவர் ஒரு நல்ல தலைவரா என தனக்கு புரியவில்லை என பிரசன்னா கூறியுள்ளார்.

நாட்டின் ஜாம்பவான் வீரராக இருந்த அனில் கும்ப்ளே மதிக்கப்படவில்லை என்றால், பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பங்கரும், ஃபீல்டிங் பயிற்சியாளரான ஸ்ரீதரும், கோஹ்லியிடம் தைரியமாக பேச முடியாது என்று நான் கருதுகிறேன். கோஹ்லியே எல்லாவற்றையும் செய்து விடுவார் என்று கருதினால், பயிற்சியாளர் எதற்கு தேவையில்லாமல் இருக்க வேண்டும் எனவும் பிரசன்னா கடுமையாக சாடியுள்ளார்.

Related posts: