ரி – 20 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடமுடியும் போது ஏன் இருதரப்பு போட்டிகளில் விளையாட முடியாது – கிரிக்கெட் வீரர் ரஷிட் கான் கேள்வி !.
Monday, June 24th, 2024
உலகக் கிண்ண போட்டிகளில் அவுஸ்திரேலிய அணிக்கு ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடமுடியும் போது ஏன் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷிட் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தலிபான்களின் ஆட்சியை காரணம் காட்டி ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இருதரப்பு போட்டிகளை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தொடர்ச்சியாக ஒத்திவைத்துவரும் நிலையில் ரஷிட் கான் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் விளையாட்டு என்பது ஒரு நாட்டை மட்டுமன்றி அனைவரையும் ஒன்றிணைக்கக்கூடியது எனவும், தான் அனைத்து அணிகளுக்கெதிராகவும் விளையாட விரும்புவதாகவும் ரஷிட் கான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வங்கதேசத்தை ஒரே நாளில் வதைத்த தென் ஆப்பிரிக்கா!
உபாதையால் பிரிஸ்பேன் டென்னிஸ் தொடரில் விலகும் நடால்!
உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி!
|
|
|


