ரியல் ஹீரோ இவர்தான்!
Wednesday, July 18th, 2018
2018 உலகக்கோப்பையை பிரான்ஸ் அணி கைப்பற்றியதால் அந்த அணி வீரர்களை மட்டுமின்றி, பிரான்ஸ் அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்பஸ்க்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளன.
1998 உலகக்கோப்பை கால்பந்து தொடரில், டெஸ்சாம்பஸ் தலைமையில் பிரான்ஸ் அணி களமிறங்கியது.
இத்தொடரின் இறுதிப் போட்டியில் பிரேசில் அணியை வீழ்த்தி, பிரான்ஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெற்றதால் பிரான்சின் சாதனை நாயகனாக உருவெடுத்தார் டெஸ்சாம்பஸ்.
அணிக்கு பயிற்சி கொடுக்கும் விதம் மற்றும் இளம் வீரர்களை தெரிவு செய்யும் விதம் ஆகியவற்றால் ஏனைய அணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தினார். இவரது சிறந்த திட்டமிடல் காரணமாகவே 24 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை பிரான்ஸ் அணி தன்வசப்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் அணி வெற்றிபெற்றதும், வீரர்கள், தங்களது பயிற்சியாளரை அந்தரத்தில் மிதக்கச் செய்தனர்.
ஓர் அணியில் வீரராக 1998 உலகக்கோப்பையில் பங்கேற்று பட்டம் வென்று கொடுத்ததுடன், பயிற்சியாளராகவும் மகுடம் சூட, உறுதுணையாக இருந்த இவரை பிரான்ஸ் நாட்டு மக்கள் ரியல் ஹீரோ என கொண்டாடி வருகின்றனர்.
Related posts:
|
|
|


