பெரும் பரிசுத் தொகையுடன் கூடிய போட்டி!

Sunday, August 4th, 2019

இலங்கை வரலாற்றில் பெரும் பரிசுத் தொகை வழங்கும் விளையாட்டுப் போட்டியினை ஐபிசி ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண உதைபந்தாட்ட கழகங்களை உள்ளடக்கிய 2019ஆம் ஆண்டிற்கான வடக்கு, கிழக்கு ப்றீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டி (NEPL) எதிர்வரும் ஆறாம் திகதி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள 12 அணிகள் பங்கேற்கவுள்ளன. போட்டியில் பங்குபற்றும் கழகங்கள் அனைத்தும் ஒன்றையொன்று லீக் சுற்றில் எதிர்த்தாடவுள்ளன. இதன் பிரகாரம் மொத்தம் 61 போட்டிகள் நடைபெறவுள்ளன.

லீக் சுற்று முடிவில் புள்ளிகள் நிலையில் முதல் நான்கு இடங்களை அடையும் அணிகள் இறுதிச் சுற்றில் விளையாட தகுதி பெறும்.

இப்போட்டிகளில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொள்ளும் அணிக்கு 50 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளதுடன்,

இரண்டாம் இடத்தை தட்டிச் செல்லும் அணிக்கு 20 இலட்சமும், 3ஆம் இடத்தினைப் பெறும் அணிக்கு 10 இலட்சம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, நான்காம் இடத்தினைப் பெற்றுக் கொள்ளும் அணிக்கு 5 இலட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் உடன் வழங்கப்படவுள்ளது.

இப்போட்டிகளுக்கான முழுப் பரிசுத் தொகையினையும் ஐபிசி ஊடக வலையமைப்பு வழங்குகிறது. இலங்கை வரலாற்றில் இதுவரை எந்தவொரு போட்டிகளிலும் இவ்வளவு பெரும் பரிசுத் தொகை வழங்கப்படவில்லை.

வடக்கு, கிழக்கு ப்றீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டியினை ஏற்பாடு செய்து விளையாட்டினை ஊக்குவிக்கும் நோக்குடன் ஐபிசி தமிழ் வரலாற்றில் தடம் பதித்து நிகழ்த்துகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts: