ராபாடா கடிதத்தால் தலை குனிந்த சர்வதேச கிரிக்கட் பேரவை!

Monday, March 26th, 2018

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் முதலானவர்களுடன், தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிஸோ ரபாடா தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாற்றப்பட்டார், இதன் காரணமாக அவருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதித்திருந்த போதிலும், மேன்முறையீடு காரணமாக குறித்த தடை நீக்கப்பட்டு ஊதியத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து ராபாடா சர்வதேச கிரிக்கெட் சபைக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது;

” தன்னால் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக விக்கெட் ஒன்றினை கைப்பற்றியமையினை கொண்டாடியதனை ஐ.சி.சி ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால், பங்களாதேஷ் அணியின் “பாம்பு நடனம்” குறித்து ஐ.சி.சி நிலைப்பாடு என்ன” என சர்வதேச கிரிக்கெட் சபையிடம் கேள்வி எழுப்பியுள்ளார். எனது நடத்தை பேய் மாதிரி எனில், தொலைக்காட்சிக்கு பொருந்தாது எனின், விசேடமாக போட்டியினை பார்வையிடும் பிள்ளைகளுக்கு பொருந்தவில்லை எனின், பங்களாதேஷ் அணியின் நடனம் குறித்து என்ன சொல்வது? அணியின் தலைவர் என்ற முறையில் ஷகீப் அல் ஹசன் இனது நடத்தையினை ஏற்கமுடியுமா? நான் கண்ணாடிகளை உடைத்தேனா? அவ்வாறு இல்லை என்றால் மைதானத்தில் மோதிக் கொண்டேனா?” என குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.சி.சி குற்ற விசாரணை தொடர்பாக ஸ்டீவ் ஸ்மித் தனது காட்டமான கருத்தையும், விமர்சனத்தையும் முன்வைத்திருந்தமை இங்கு சுட்டத்தக்கது

Related posts: