யுவராஜ்சிங்கின் கண்ணீர் கதையை பதிவு செய்த மனைவி!

Sunday, January 22nd, 2017

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இங்கிலாந்து அணி, ஒரு நாள் தொடரையும் தற்போது இழந்துள்ளது.

இவ்விரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி வரும் 22 ஆம் திகதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சதம் கடந்து 150 ஓட்டங்கள் குவித்து வானவேடிக்கை நிகழ்த்திய யுவராஜ்சிங்கின் மறுபக்கத்தை அவரது மனைவி தனது இன்ஸ்டிராகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில், அவர் 127 பந்தில் 150 ஓட்டங்கள் யுவராஜ் சிங் குவித்தார். ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது என கூறியிருந்தார்.

மேலும் யுவராஜ் சிங் புற்று நோய்யில் இருந்து மீண்டு வந்து கீமோ தரப்பி செய்து கொண்டு தன்னை ஒரு சிறந்த வீரராக உருவாக்குவதற்கு சரியான முறையில் உடற்பயிற்சி மேற்கொண்டு அதற்காக அவர் அடைந்த துன்பங்கள் பல.

அதன் பயனாகவே அவர் தற்போது இந்திய அணிக்காக விளையாடுவதை காணும் போது மறக்கமுடியவில்லை எனவும் எதுவாக இருந்தாலும் அனைத்தையும் தூக்கி எறிந்து தற்போது புற்று நோயை வீழ்த்தி அசத்தி கொண்டிருக்கிறார் என பதிவேற்றம் செய்துள்ளார்.

யுவராஜ் சிங்கிற்கு கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின்பு புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. அதன் பின்னர் அவர் அது தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து மீண்டும் தற்போது இந்திய அணிக்காக விளையாடி வருவது ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யுவராஜ் மருத்துவமனையில் இருந்த போது ஏராளமான ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். மேலும் ஒரு சிலர் கண்ணீர் கூட விட்டனர். இதை அறிந்த யுவராஜ் தனக்காக பிரர்த்தனை செய்த அனைத்து ரசிகர்களுக்கும் தன்னுடைய நன்றி என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

yuv(1)

Related posts: