உதைபந்து அட்டவணை ஜனவரி முதலாம் திகதி வெளியீடு!

Saturday, December 3rd, 2016

2௦17ஆம் ஆண்டுக்குரிய உதைபந்து போட்டிகளுக்கான கால அட்டவணை ஜனவரி 1ஆம் திகதி வெளியிடப்படும் என இலங்கை உதைபந்து சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பு கால்பந்து இல்லத்தில் நடைபெற்ற கார்கில்ஸ் புட்சிட்டி எப்.ஏ கிண்ண அறிமுகத்திற்கான செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்பொழுதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது 2௦17ஆம் ஆண்டில் உதைபந்து போட்டிகள் எவ்வாறாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த இலங்கை கால்பந்து சம்மேளன நிதி மற்றும் தகவல் தொடர்பு தலைவர் ரஞ்சித் ரொட்ரிகோ மற்றும் அனுர டி சில்வா ஆகியோர் பல்வேறு விளக்கங்களை அளித்தனர்.

”2௦17ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெற்காசிய உதைபந்து சம்மேளன சம்பியன்ஷிப் கிண்ணம் பங்களாதேஷின் டாக்காவில் ஆரம்பமாக உள்ளதால், சம்பியன் லீக் போட்டிகள் முன்னதாகவே ஆரம்பிக்கப்படும். பெரும்பாலான போட்டிகள் கூடிய விரைவில் நடாத்தப்பட்டு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பாகவே போட்டிகளை முடித்து, தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களை விடுவிக்க வேண்டும்” என்று ரஞ்சித் ரொட்ரிகோ தெரிவித்தார்.

”இந்த பருவகால போட்டிகளில் குறித்த பிரச்சினைகள் இருந்ததால், சம்பியன் லீக் போட்டிகளை இடைநடுவே நிறுத்தி தேசிய அணி வீரர்களை விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின் போட்டிகளை மீண்டும் ஆரம்பிக்கும்போது மழை குறுகிட்டதன் காரணமாக மீண்டும் அதனை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதனால், இம்முறை குறித்த எப்.ஏ கிண்ணப் போட்டிள் முடிவடைந்தவுடன், எதிர்வரும் மே மாதத்தில் சம்பியன் லீக் போட்டிகளை ஆரம்பிக்க உள்ளோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அனுர டி சில்வா கருத்து தெரிவிக்ைகயில், ”இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பாக போட்டிகள் நிறைவுறுவதால் கால்பந்து வீரர்கள் குறித்த காலப்பகுதியில் போதிய போட்டிகள் இல்லாமலிருப்பது தேசிய அணி வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தேசிய அணியின் பயிற்றுவிப்பளர் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். அதனால், இது குறித்து தலைமை பயிற்சியாளர் டட்லி ஸ்டீன்வாலுடன் கலந்துரையாடி, 2௦17ஆம் ஆண்டுக்கான அவருடைய திட்டங்களை சமர்ப்பிக்குமாறு வேண்டியுள்ளோம். அத்துடன் ரொட்ரிகோ கூறியப்படி எங்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக சம்பியன் லீக் போட்டிகளை நிறுத்த வேண்டிய தேவை உள்ளது.

ஆனால், அடுத்துவரும் மூன்று மாதங்களில் வீரர்களுக்கு தகுந்த போட்டிப்பயிற்சிகள் இன்மையால், மூன்று மாதங்களுக்கு முன்பாக நிறுத்துவதற்கு பதிலாக ஒரு மாதத்துக்கு முன் நிறுத்த வேண்டும் என்று பயிற்சியாளர் டட்லி ஸ்டீன்வால் விரும்புகின்றார்.

கடந்த மாதம் ஏ.எப்.சி ஒற்றுமை கிண்ணத்துக்காக இலங்கை அணி சென்றிருந்தபோது இது ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது. குறித்த பிரசித்தி பெற்ற சர்வதேச போட்டிக்கு முன்னர் இலங்கை அணி ஒரே ஒரு சர்வதேச போட்டியில் மாத்திரமே கலந்துகொண்டிருந்தது. தலைமை பயிற்சியாளர் டட்லி ஸ்டீன்வாலின் பிடிவாதம் காரணமாகவே தெரிவு செய்யப்பட்ட தேசிய கால்பந்து வீரர்களை பயிற்சிகளுக்காக மாத்திரம் அவர் வைத்திருந்தார். இதன் காரணமாக போட்டிகள் அனைத்தும் இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டன” என்று டி சில்வா மேலும் கூறினார்.

மேலும் பேசிய அனுர டி சில்வா, ”நாங்கள் திட்டமிட்டுள்ள 2௦17ஆம் ஆண்டுக்கான சர்வதேச உதைபந்து போட்டிகள் அட்டவணை விரைவில் முடிவு செய்யப்படும்.

சர்வதேச ரீதியில் எங்களுக்குள்ள போட்டிகள் தொடர்பில் எங்களுக்கு தெரியும். அதேநேரம் உள்ளூர் போட்டிகள் குறித்த அட்டவணைகளும் ஏற்கனவே விளையாட்டுத்துறை அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஏனெனில், விளையாட்டுத்துறை அமைச்சே 2௦17ஆம் ஆண்டுக்கான போட்டிகள் அட்டவணைகளை தாயாரிக்கின்றன. எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி 2௦17ஆம் ஆண்டுக்காக நாங்கள் தயாரித்த அட்டவணை பற்றி உங்களுக்கு தெரிவிப்போம்.

நாங்கள் தேசிய அணி வெளிப்படுத்தும் திறமைகள் குறித்து திருப்தி அடையவில்லை. எங்களுக்கு தெரியும், எங்களுக்கு நிறைய சர்வதேச போட்டிகள் இருகின்றன. ஆனால் அவை எல்லாவற்றுக்கும் தேவையான நிதி எங்களிடம் இல்லை.

எனினும், குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு ஒரு சர்வதேச போட்டியினை ஒழுங்கு செய்வதற்கு நாங்கள் எங்களால் முடிந்த அளவு முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.

அதே சமயம், இலங்கையில் சர்வதேச போட்டிகளை நடத்த ஒழுங்கு செய்வதால், கால்பந்து ரசிகர்களுக்கு அதனைப் பார்க்கக் கூடிய வாய்ப்புக்கள் உருவாகின்றன. இது இலங்கை கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தியாகும்.

ஏனெனில், இறுதியாக 2௦15 ஆண்டு மார்ச் மாதத்திலேயே சர்வதேச போட்டியொன்று இலங்கையில் நடைபெற்றுள்ளது.2018ஆம் ஆண்டு உலக கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டியாக நடைபெற்ற குறித்த போட்டியில் இலங்கை அணி பூட்டான் அணியிடம் 1-௦ என்ற கோல் அடிப்படையில் தோல்வியுற்றது.

எங்களுடைய நிகழ்ச்சித் திட்டங்கள் 2௦22ஆம் ஆண்டு வரை திட்டமிடப்பட்டுள்ளன. அத்துடன் நாங்கள் எங்களுடைய அனுசரணையாளர்களுடன் இது குறித்து ஆலோசித்து வருகின்றோம். இறுதி தீர்மானம் எட்டப்படும் பட்சத்தில் இது குறித்து விளக்கி கூறுவோம்.

colanura-de-silva144809922_5070389_02122016_aff_cmy

Related posts: